காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா

காரைக்கால், பிப்.13: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழாவையொட்டி, பந்தல்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது. காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில், ஆண்டு தோறும் 14 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழா, வரும் பிப்ரவரி 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடகவுள்ளது. இவ்விழாவையொட்டி, நேற்று பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் நடைபெற்ற பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியில், கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணை தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் முன்னாள் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் உபயதாரர்கள், நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் கலந்து கொண்டனர்.கொடியேற்றத்தை தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலாவும், தேர்த்திருவிழா, தெப்பத்திருவிழா, புஷ்ப பல்லாக்கு, திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

Related Stories: