நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 39,323 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்

நெல்லை, பிப். 11:  நெல்லை, ெதன்காசி மாவட்டத்தில் 39,323 மாணவ, மாணவிகளுக்கு இலவச ைசக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.நெல்லை, தென்காசி மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா, சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் சம்பத்குமார் தலைமை வகித்தார். அமைச்சர் ராஜலட்சுமி, மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி பேசியதாவது: எதிர்காலத்தின் சிறந்த சமூகத்தை உருவாக்க நிகழ்கால மாணவ சமுதாயத்திற்கு நல்ல முறையில் கல்வி வழங்கும் வகையில் இலவச மடிக்கணினி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், சீருடை என 14 வகையான நலத்திட்டங்களை முதல்வர் வழங்கி வருகிறார். இதன் மூலம் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காட்டில் 100 சதவீதத்தை எட்டச் செய்து கல்வி புரட்சியை ஏற்படுத்தி உள்ளார். இதன் அடிப்படையில் பிளஸ்1, பிளஸ்2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, வள்ளியூர், சேரன்மகாதேவி ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் 28,107 மாணவ, மாணவிகள், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்காசி ஆகிய 2 கல்வி மாவட்டங்களில் 11,216 மாணவ, மாணவிகள் என மொத்தம் 39,323 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது, என்றார்.

நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் மணிஷ்நாரணவரே, மாவட்ட மத்திய வங்கி கூட்டுறவு தலைவர் தச்சை கணேச ராஜா, மாவட்ட ஆவின் தலைவர் சுதா பரமசிவம், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரேணுகா (நெல்லை), எம்பெருமாள் (வள்ளியூர்), சவுந்தரி சேகரி(தென்காசி) நெல்லை கூட்டுறவு அச்சக தலைவர் கண்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்திபன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி துணை தலைவர் வேலுச்சாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்வர்ணா, கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆறுமுகம், ரமேஷ், ராமநாதன், வேல்முருகன், சவுந்தர், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார். பாவூர்சத்திரம்: மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த இலவச சைக்கிள்கள் வழங்கும் விழாவிற்கு தலைமை ஆசிரியர் மாடசாமி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செந்தமிழ்அரசு வரவேற்றார். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு 125 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். விழாவில் அதிமுக ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், முன்னாள் துணை சேர்மன் குணம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், பஞ். முன்னாள் துணை தலைவர் பெரியபாண்டி மற்றும் பேச்சிமுத்து, கொம்பையா, ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

Related Stories: