காரைக்கால் மனிதநேய மக்கள் அறிவிப்பு காரைக்கால், பிப்.4:மத்திய பாஜக அரசின் தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு ஆதரவாக செயல்படும், பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து, வரும் 7ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என காரைக்கால் மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. காரைக்கால் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது தலைமை வகித்தார். தமுமுக மாவட்டச் செயலாளர் கமால் ஹூஸைன், நகரத் தலைவர் முஹம்மது ஷெரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம் கலந்து கொண்டார்.
