அறந்தாங்கி அருகே பூவை மாநகர் அரசு பள்ளியில் ஆய்வகம் திறப்பு

அறந்தாங்கி, ஜன.28: அறந்தாங்கி அடுத்த பூவைமாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வக திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் தலைமை தாங்கி, மாணவர்கள் பயன்பாட்டிற்கு கணினி ஆய்வகத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும், பட்டிமன்ற நடுவருமான தங்க.ரவிசங்கர் கலந்து கொண்டார். பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் அய்யாக்கண்ணு வரவேற்றார். பள்ளியின் முதுகலை ஆசிரியர் தெய்வேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: