40 எஸ்.எஸ்.ஐ., உள்பட 100 போலீசார் மாற்றம்

சேலம், ஜன.28:  சேலம் மாவட்ட காவல்துறையில், போலீஸ் ஸ்டேஷன்கள், மதுவிலக்கு பிரிவு, மாவட்ட ஆயுதப்படையில் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்ஐகள், ஏட்டுகள், போலீஸ்காரர்களுக்கு விருப்ப இடமாறுதல் வழங்க நேற்று, சிறப்பு முகாம் எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. இதில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி விரும்ப இடமாறுதல் கேட்டு விண்ணபித்திருந்த சிறப்பு எஸ்ஐக்கள் 40 பேர் உள்பட ஏட்டுகள், போலீசார் என 100 பேர் கலந்துகொண்டனர்.  அவர்களை ஒவ்வொருவராக அழைத்து எஸ்பி தீபாகனிக்கர், விருப்பத்தின் பேரில் இடமாறுதல் வழங்கி உத்தரவிட்டார். மதுவிலக்கில் இருந்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு 20க்கும் மேற்பட்டோர் மாறுதல் பெற்றனர். இதேபோல், மதுவிலக்கு பிரிவிற்கு, ஸ்டேஷன்களில் பணியாற்றிய போலீசாரை மாற்றி எஸ்பி ஆணை வழங்கினார். முகாமில், கூடுதல் எஸ்பிக்கள் அன்பு, சுரேஷ்குமார், டிஎஸ்பிக்கள் சூரியமூர்த்தி, பாஸ்கரன், ராஜூ, உமாசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags : SSI ,police officers ,
× RELATED எஸ்.எஸ்.ஐ வில்சனை கொன்ற அப்துல் ஷமீம்,...