காவேரிப்பட்டணம் அருகே பெண் குழந்தையுடன் இளம்பெண் கடத்தல்

கிருஷ்ணகிரி, ஜன.24: காவேரிப்பட்டணம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகபூப் பாஷா(30).  டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரிஸ்வானா(24). இவர்களுக்கு 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்த ரிஸ்வானா காலை 9 மணிக்கு குழந்தையுடன் வெளியே சென்றுள்ளார். அதன் பின்பு வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மகபூப் பாஷா, பலஇடங்களில் தேடிப்பார்த்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இனிடையே தனது மனைவி மற்றும் மகளை, ஓசூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபர் கடத்திச் சென்றிருக்கலாம் என மகபூப் பாஷா காவேரிப்பட்டணம் போலீசில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : abduction ,Kaveripatnam ,
× RELATED மாணவியை கடத்தி திருமணம்