மேச்சேரி அருகே நடந்த தொழிலதிபர் கொலை வழக்கில் ஜோதிடர் உள்பட 7 பேர் கைது

மேட்டூர், ஜன.22: மேச்சேரி அருகே நேற்று முன்தினம் தொழில் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் கி கம்பம் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம்(62). இவர் கடந்த 2002ம் ஆண்டு, சேலம் தொழில்பேட்டையிலும், கருப்பூரிலும் கிரஷர் இயந்திரங்களுக்கு, உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக தொழிற்சாலை மூடப்பட்டது. மீண்டும் சொந்த ஊருக்கு சென்ற, பாலசுப்ரமணியம், கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் சேலம் வந்தார். அங்கு தனது நண்பர் மைலுதின் வீட்டில் தங்கி இருந்தார். அவர் மூலம் தாரமங்கலம் அருகே செலவடையை சேர்ந்த ஜோதிடர் இளையராஜா(31), என்பவரிடம் மேனேஜராக சேர்ந்தார். இளையராஜாவிடம் கார் ஓட்டுவது, அவரிடம் ஜோதிடம் பார்பவர்களுக்கு டோக்கன் கொடுப்பது மற்றும் ஜோதிடரின் டிரஸ்ட் ேவலைகளையும் செய்து வந்தார்.

Advertising
Advertising

ஜோதிடர் இளையராஜா வெளியே சென்ற போது, அவரது மனைவி ரம்யாவிடம், சில்மிசத்தில் பாலசுப்ரமணி ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து இளையராஜாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து பாலசுப்ரமணியத்தை ஒழித்து கட்ட ேவண்டும் என அவர் திட்டமிட்டார். இளையராஜவிடம் ஜோதிடம் பார்க்க, சேலம் பழைய சூரமங்கலத்தை சேர்ந்த நாசர், என்பவர் வந்தார். இவர் எலக்ட்ரோ ஹோமியோபதி டாக்டர். இவர் ஆரம்பத்தில் ேவறு ஒருவரிடம் ஜோசியம் பார்த்துள்ளார். அப்போது பாலசுப்ரமணியம், நாசருக்கு பில்லி சூனியம் வைத்து விட்டதாக அவர் கூறியுள்ளார். வரும் அமாவாசைக்குள் பாலசுப்ரமணியத்திற்கு ஒரு வழி செய்யாவிட்டால், உனது நிலை மோசமாகிவிடும் என, அந்த ஜோதிடர் நாசரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் நாசரும், இளையராஜாவும் சந்தித்தனர். அப்போது எப்படியாவது, பாலசுப்ரமணியத்தை தீர்த்துக்கட்ட ேவண்டும் என அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 19ம் தேதியன்று, இளையராஜா பூஜை செய்த பொருட்களை காவிரி கரையில் எரிப்பதற்காக, இருசக்கர வாகனத்தில் பாலசுப்ரமணியன், இளையராஜா இவரது உறவினர் ராமசந்திரன் ஆகிய மூன்று பேரும் சென்றுள்ளனர். மேட்டூர் நீர்த்தேக்க பகுதியான திப்பம்பட்டி பகுதிக்கு சென்றபோது அங்கு பூஜை செய்த பொருட்களை இளையராஜா எரித்துக்கொண்டிருந்தார். அருகில் இருந்து பாலசுப்ரமணியும், நாசரும் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது நாசர் அவரது நண்பர்களான ஏழுமலை, கணேசன், வெங்கடேசன், மாதேஷ் உள்ளிட்ட 5 பேரும் காரில், திப்பம்பட்டிக்கு சென்றனர்.   

அவர்கள் திடீரென பாலசுப்ரமணியத்தின் கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர். பின்னர் கொலையை மறைக்க, விபத்து போல் காட்டுவதற்காக, பாலசுப்ரமணியத்தின் சடலத்தை எடுத்துக்கொண்டு, காமனேரி- கோவிலூர் சாலையில், கொண்டமுத்தான் பெருமாள் ேகாயில் அருகில் வீசி விட்டு, இருசக்கர வாகனத்தையும் அங்கு விட்டுச்சென்றனர். இது குறித்து ேமச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், 5வது மயில் பகுதியில், மேச்சேரி போலீசார் வாகன தனிக்ைகயில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்திய போது, பாலசுப்ரமணியத்தை கொலை செய்த, இளையராஜா(31), ஏழுமலை(40), நாசர்(51), கணேசன்(31), வெங்கடேஷ்(34) ஆகியோர் பிடிபட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் ேபரில், செலவடையை சேர்ந்த ராமசந்திரன்(27), கர்நாடக மாநிலம் சந்தப்பாடியை சேர்ந்த மாதேசன்(26) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: