இடைப்பாடியில் திமுக சார்பில் பொங்கல் விழா

இடைப்பாடி, ஜன.22: இடைப்பாடி அருகே சின்ன முத்தூர் 6வது வார்டு  கிளை திமுக சார்பில், பொங்கல் விழாவையொட்டி, ஏழைகளுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கும் விழா நடந்தது. இடைப்பாடி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி ஊராட்சியில், சின்னமுத்தூர் 6வது வார்டு கிளை திமுக சார்பில், பொங்கல் விழாவையொட்டி, ஏழைகளுக்கு இலவச வேஷ்டி, சேலை, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா நடந்தது. இடைப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் நல்லதம்பி தலைமை வகித்தார். 6வது வார்டு கிளை செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். ஊராட்சி செயலாளர் செந்தில்குமார், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் கருப்பண்ணன், நிர்வாகிகள் வேட்டுவப்பட்டி மாணிக்கவாசகம், ராஜவேலு, கண்ணன், வையாபுரி, சக்தி வே பிரிட்ஜ் தங்கவேலு, சண்முகம், ராஜகோபாலு, மாரிமுத்து, அண்ணாமலை, குழந்தை, தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணம் மற்றும் இலவச வேஷ்டி, சேலை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், ஏராளமான பொதுமக்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: