மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.21:தேன்கனிக்கோட்டை மற்றும் போச்சம்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களை, அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் அளித்து பயனடையலாம். இதேபோல், போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் வரும் 28ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி தலைமை வகிக்கிறார். இதிலும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Special Oversight Meeting for Disabled Persons ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்