சூளகிரி அருகே யானை தாக்கி பெண் படுகாயம்

சூளகிரி, ஜன.13: சூளகிரி தாலுகா கொம்மேபள்ளி ஊராட்சி அகரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மா(50). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு அருகேயுள்ள மகளிர் சுகாதார வளாகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென யானை ஒன்று அவரை தாக்கியதில் கிருஷ்ணம்மா கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் யானையை விரட்டினர். பின்னர், கிருஷ்ணம்மாவை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Elephant attack woman ,Chulagiri ,
× RELATED ஓசூரில் பரபரப்பு ரவுடி மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி