ஆறு, ஏரியில் விழுந்து சிறுமி, வாலிபர் பலி

கிருஷ்ணகிரி, ஜன.13: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே பெலத்தூர் சூடாபுரம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த எல்லப்பா மகள் தீபா(16). இவர், அங்குள்ள தேர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகலூர் போலீஸ் எஸ்ஐ ரவிக்குமார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார். இதேபோல், சூளகிரி அருகே பீரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரான கார்த்திக்(26) என்பவர், அதே பகுதியில் சிகரலப்பள்ளி என்னுமிடத்தில் உள்ள கவுண்டன் ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஏரியில் விழுந்த அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூளகிரி போலீஸ் எஸ்எஸ்ஐ சிவஞானம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : River ,lake ,
× RELATED சிறுகமணி காவிரி ஆற்றிலிருந்து