ஓசூர் சோமேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு'

ஓசூர், ஜன.13: ஓசூர் சோமேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சோமேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், அதிகாலை முதலே சுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையுடன் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஓசூர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: