ரத்ததான சிறப்பு முகாம்

காவேரிப்பட்டணம், ஜன.13: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தியன் ரெட் கிராஸ் நூற்றாண்டு விழாவை முன்ன்ட்டு தனியார் கல்லூரியில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் கோவிந்தன் கலந்துகொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் 74 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு ஓசூர் அரசு ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன், மருத்துவர் பூபதி, இயக்குனர் சுதாகரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தியன் ரெட் கிராஸ் செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். முடிவில் யூத் ரெட் கிராஸ் ஒருங்கினைப்பாளர் சையத் முகமது அப்பாஸ் நன்றி கூறினார்.

Related Stories: