குற்றாலம் செய்யது பள்ளியில் விளையாட்டு விழா

நெல்லை, ஜன. 12: குற்றாலம் செய்யது பள்ளியில் 25 ஆண்டு விளையாட்டு விழா விமரிசையாக நடந்தது.  குற்றாலம் செய்யது பள்ளியில் 25வது ஆண்டு விளையாட்டு விழா தொடக்கமாக பள்ளி மாணவர் முகமது அஸ்லம் கிராஅத் ஓதினார். மாணவி சமீமா பர்வீன் தமிழாக்கம் செய்தார். பள்ளி முதல்வர் முகைதீன் அப்துல்காதர் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற குற்றாலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தென்காசி மீரான் மருத்துவமனை டாக்டர் அப்துல்அஜிஸ், விளையாட்டு விழாவைத் துவக்கிவைத்துப் பேசினர். பள்ளித் தலைவர் பத்ஹூர் ரப்பானி வாழ்த்திப் பேசினர். பள்ளி உடற்கல்வி இயக்குநர் சுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டப்பந்தயம் போட்டிகள் நடந்தன.  கயிறு இழுக்கும் போட்டி, குத்துச்சண்டை, சிலம்பம், ஜிம்னாஸ்டிக், பிரமீடு, வில்வித்தை போன்றவற்றில் மாணவர்கள்  தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவ, மாணவிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர். அணிவகுப்பு மரியாதையை இன்ஸ்பெக்டர் சுரேஷ்  ஏற்றுக்கொண்டார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை ஆசிரியர் குமரகுருபரன், ஆசிரியை சபுவனா தொகுத்து வழங்கினார். விழாவில் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் செய்யது வெல்பர் சொசைட்டியின் மேலாளர் ஆதம் பாவா, பொறியாளர் ஆதம் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர் என ஏராளமானோர் பங்கேற்றனர். கணினி ஆசிரியர்அசன் மஜீத்  நன்றி கூறினார்.

Related Stories: