அருணாப்பேரி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா இன்று துவக்கம்

பாவூர்சத்திரம், ஜன.12: அருணாப்பேரி முத்துமாரியம்மன் கோயில் 57ம் ஆண்டு திருவிழா இன்று (12ம் தேதி) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு 108 வேத விற்பன்னர்கள் பங்கு பெற்று மகாயாகசாலை பூஜையும், தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலை என முக்கால பூஜை நடக்கிறது. 7ம் நாள் பெத்தநாடார்பட்டி, பொட்டலூர், 8ம் நாள் நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், 10ம் திருளான 21ம் தேதி கோயில் வளாகத்தில் காலை முதல் இரவு வரை வில்லிசை, இன்னிசை கச்சேரி, செண்டை மேளம் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், இரவு அம்மன் சப்பரம் வீதி உலா, பூக்குழி இறங்குதல் மற்றும் வாண வேடிக்கைகள் நடக்கிறது. மதியம் 12 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது.  ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: