கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக்கில் கேம்பஸ் இன்டர்வியூ

கடையநல்லூர், ஜன.8: கடையநல்லூர் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் பி.எஸ்.அசோசியேட்ஸ் என்ற மனிதவள மேம்பாட்டு நிறுவனமானது பட்டர் பிளை பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்காக கேம்பஸ் இன்டர்வியூ நடத்தியது. நிகழ்ச்சியில் பி.எஸ்.அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சீதாராமன் அனைவரையும் வரவேற்று, நேர்முகத்தேர்வு நடத்தினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நேர்முகத்தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் சேர்மன் முகைதீன்அப்துல்காதர் பாராட்டினார். ஏற்பாடுகளை எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் தமிழ்வீரன், துறை தலைவர்கள் வெங்கடாச்சலம், தங்கபிரதீப், செந்தூர்பாண்டியன், மேலாளர்கள் மகேஸ்வரன், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: