சிவகாசி ஒன்றியத்தை சேர்ந்த 54 பஞ்சாயத்து தலைவர்கள் பதவியேற்றனர்

சிவகாசி, ஜன 7: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 54 பஞ்சாயத்து தலைவர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 3 பஞ்சாயத்து தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 3 பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 54 பஞ்சாயத் தலைவர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அந்தந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஊராட்சியிலும் திருவிழா போன்று பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆணையூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பஞ்சாயத்து தலைவராக லயன் கருப்பு (எ) லட்சுமிநாராயணன் பதவியேற்றுக் கொண்டார்.

 அதனைத்தொடர்ந்து வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதேபோன்று தேவர்குளம் பஞ்சாயத்து தலைவராக முத்துவள்ளி மச்சக்காளை, சாமிநத்தம் பஞ்சாயத்து தலைவராக மகாலட்சுமி, செங்கமலநாச்சியார் பஞ்சாயத்து தலைவராக கருப்பசாமி, அனுப்பன்குளம் பஞ்சாயத்து தலைவராக கவிதாபாண்டியராஜன், நாரணாபுரம் பஞ்சாயத்து தலைவராக தேவராஜன், விஸ்வநத்தம் பஞ்சாயத்து தலைவராக நாகராஜன், சித்துராஜபுரம் பஞ்சாயத்து தலைவராக லீலாவதிசுப்புராஜ், ரெங்கபாளையம் பஞ்சாயத்து தலைவராக கூடம்மாள் உட்பட 54 பஞ்சாயத்துகளிலும் பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Related Stories: