குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு வீராணம், வாசுதேவநல்லூரில் ஆர்ப்பாட்டம்

சுரண்டை,டிச.31:  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுரண்டை அருகே வீராணம் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. வீராணத்தில் உள்ள  பள்ளி வாசலில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாத் தலைவர் காஜாமைதீன் தலைமை வகித்தார். ஜமாத் துனை செயலாளர் முகமது உசேன், கிளை துனை தலைவர் காதர் மைதீன், மியாக்கண்ணு, தமுமுக மாநில செயலாளர் நயினார் முகமது, எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் ஜாபர் அலி, உஸ்மானி, மமக மாவட்ட தலைவர் முகமது யாகூப் ஆகியோர் பேசினர். தமுமுக மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் அப்துல் முதலிபு, ததஜ கிளை தலைவர் அம்சா மற்றும் காதர் மைதீன், ஷாஜகான், சிந்தா, முகமது ஆசிக், முகமது அப்பாஸ், சதாம் உசேன், புகாரி, இப்ராஹிம், வஹாப், அமானுல்லா, அனீஸ் அகமது, ஹக்கீம் மற்றும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். எஸ்டிபி ஐ கிளை தலைவர் சேக் அப்பாஸ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தை யொட்டி சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சேவியர் ,மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உமா மஹேஸ்வரி, பாரத் லிங்கம்,சந்திர சேகர் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

புளியங்குடி: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு எனும் பெயரில் மக்களை மதரீதியாக பிரிக்கும் மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாசுதேவநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நடராசன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் நடராசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமசுப்பு, மருதையா, சுப்பையா, பேச்சியம்மாள், சுப்பிரமணியன், கிளைச்செயலாளர்கள் வாசு மீனாட்சிராஜ், சுப்பிரமணியாபுரம் சஞ்சீவி, மலையடிக்குறிச்சி வெள்ளத்துரை, நகரம் தங்க மாரி, நெல்கட்டும்செவல் கணபதிசாமி, கூடலூர் கருப்பசாமி, வடுகப்பட்டி பிச்சை, தேவிபட்டினம் புஸ்பம், சிவகிரி சிவசுப்பிரமணியன், ஆத்துவழி மங்களா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: