மேச்சேரி அருகே நிலக்கடலையில் அதிக மகசூல்

பெறும் தொழில்நுட்ப விளக்க முகாம்மேச்சேரி, டிச.30: மேச்சேரி அருகே புக்கம்பட்டியில் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்ப விளக்க முகாம் நடைபெற்றது. மேச்சேரி அருகே புக்கம்பட்டியில் வேளாண்மைத் துறை சார்பில், பண்ணைப்பள்ளி நடைபெற்றது. இந்த முகாமில் நிலக்கடலையில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பம் குறித்து விளக்கி கூறப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா கலந்து கெரண்டு பேசுகையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப எண்ணை வித்துகள் உற்பத்தியை பெருக்குவது அவசியம் என தெரிவித்தார். மேலும், நிலகடைலை மற்றும் சூரியகாந்தி எள், ஆமணக்கு உள்ளிட்ட எண்ணை வித்து சாகுபடியில் அதிக மகசூல் பெறும் தொழிநுட்ப முறைகளை பின்பற்ற வேண்டும் என்றார். வேளாண்மை இணை இயக்குனர் சுந்தர் பங்கேற்று பேசுகையில், நிலகடலை பயிரை கொத்து, அடர் கொத்து மற்றும் கொடி என மூன்று வகையாக பிரிக்கலாம். கொத்து ரகங்கள் 95 முதல்  105 நாட்களிலும், அடர்கொத்து ரகங்கள் 120 முதல்  125 நாட்களிலும், கொடி ரகம் 125 முதல் 130 நாட்களிலும் மகசூல் தரவல்லது. முறையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என விளக்கி கூறினார். முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை உதவித் தொழில் நுட்ப மேலாளர்கள் பத்மாவதி, சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: