களக்காட்டில் ஒரே தெருவில் 50 பேருக்கு காய்ச்சல்சிறப்பு மருத்துவ முகாம் அமைப்பு

களக்காடு, டிச.29: களக்காட்டில் ஒரேதெருவில் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டம், களக்காடு பேரூராட்சிக்குட்பட்ட தோப்புத்தெருவில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் குடிநீர் மூலம் பரவுகிறதா, வேறு ஏதேனும் காரணமா என பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே தெருவில் 50க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மர்ம காய்ச்சல் மற்ற பகுதிகளுக்கும் பரவும் அபாய சூழல் நிலவுகிறது.

 இதனைதொடர்ந்து திருக்குறுங்குடி சுகாதார நிலைய மருத்துவக்குழுவினரும், பேரூராட்சி ஊழியர்களும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று அங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர். இதில் டாக்டர் பீர்முகம்மது, வட்டார சுகாதார ஆய்வாளர் நம்பிராஜன், சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு உள்பட பலர் பங்கேற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். அனைவருக்கும் நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது.

Related Stories: