×

மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

சூளகிரி, டிச.16: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனையொட்டி, அந்தந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்களை தயார்படுத்தும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வரும் 30ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின்போது மாற்றுத்திறத்திறனாளிகள் உள்பட அனைத்து வாக்காளர்களும் எளிதாக பூத்துக்குள் சென்று வாக்களிக்க வசதியாக சாய்வுதளம் மற்றும் குடிநீர், மின்விளக்கு, மின்விசிறி, தடையில்லா மின் சப்ளைக்கான முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேசைகள், இருக்கைகள் பழுதுபார்த்தல், சுற்றுப்புற தடுப்பு வேலிகள் உறுதிபடுத்துதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி இயக்குநர் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், ஓரிரு நாட்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, சூளகிரி வட்டார தேர்தல் அலுவலர்கள் விமல், ரவிக்குமார், பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவுக்கு குறுகிய காலமே உள்ளதால், வாக்குச்சாவடி பராமரிப்பு பணியை விரைந்து முடித்து தயார்நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டனர்.


Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...