×

மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஒரேநாளில் 705 பேர் வேட்புமனு தாக்கல்

கிருஷ்ணகிரி, டிச.13: கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று ஒரே நாளில் 705 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூர் ஒன்றியங்களுக்கு வரும் 27ம் தேதியும், கிருஷ்ணகிரி, கெலமங்கலம், பர்கூர், வேப்பனஹள்ளி, சூளகிரி ஒன்றியங்களுக்கு 30ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 10 ஒன்றியங்களில் 333 ஊராட்சி மன்ற தலைவர்கள், 3 ஆயிரத்து 9 வார்டு உறுப்பினர்கள், 221 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 23 மாவட்ட கவுன்சிலர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 586 பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் தொடங்கிய 3 நாட்களில் 745 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 4வது நாளான நேற்று(12ம் தேதி) மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 5 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 55 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 167 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 478 பேரும் என மொத்தம் 705 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதுவரை மொத்தம் 1450 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : body elections ,
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாஜக...