×

ஓசூர் மேயர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு

ஓசூர், டிச.12:  சேலம், ஓசூர் மாநகராட்சிகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள  நிலையில், மேயர் பதவியை தக்க வைக்கும் வகையில், அதிக வார்டுகளை கைப்பற்ற  அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகிறது.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி  அமைப்புகளுக்கு வரும் 27மற்றும் 30ம்தேதிகளில் தேர்தல் நடக்கிறது.  இந்நிலையில் நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளின் இட ஒதுக்கீடு  குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதில் சேலம் மாநகராட்சி  ெபாதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  புதிதாக அறிவிக்கப்பட்ட ஓசூர் மாநகராட்சியும் பொதுப்பிரிவினருக்கே  ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சியாக இருந்த சேலம் 1997ம் ஆண்டு,  மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது பொதுப்பிரிவினருக்கு  ஒதுக்கப்பட்டது. திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சூடாமணி,  கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சேலம் மாநகராட்சியின் முதல் ேமயராக  பொறுப்பேற்றுக் கொண்டார். 2001ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக  சார்பில் நேரடியாக ேமயர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ்குமார் வெற்றி  பெற்றார்.

இதையடுத்து  2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் சேலம் மாநகராட்சி எஸ்சி பிரிவினருக்கு  ஒதுக்கப்பட்டது. திமுக சார்பில் போட்டியிட்ட ரேகாபிரியதர்ஷினி,  கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பெண் மேயராக ெபாறுப்பேற்றுக்  கொண்டார். தற்போதையை தேர்தலில் மீண்டும் சேலம் மாநகராட்சி  பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சியில் உள்ள  60வார்டுகளில் எந்த கட்சி அதிக கவுன்சிலர்களை தக்கவைக்கும் என்ற  எதிர்பார்ப்பே தற்போது எழுந்துள்ளது. அதன் பிறகே, மேயராக முடிசூடப்போவது  யார் என்பது முடிவு செய்யப்படும்.  
 இதே போல் கிருஷ்ணகிரி  மாவட்டத்தின் தொழில் மையமாக திகழும் ஓசூர் நகராட்சி அந்தஸ்தில் இருந்து  சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சி மேயர் பதவியும்  பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 45 வார்டுகளை கொண்ட ஓசூர்  மாநகராட்சியில் அதிக வார்டுகளை தக்க வைக்கும் கட்சியில் ஒருவரே, முதல்  மேயர் என்ற பெருமையை பெற முடியும். இதை கருத்தில் கொண்டு முக்கிய  கட்சிகளின் கவனம் ஓசூர் மீது பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Mayor ,Hosur ,General Division ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!