மாவட்டம் முழுவதும் 10 ஒன்றியங்களில் 3,586 பதவிகளுக்கு தேர்தல்

கிருஷ்ணகிரி, டிச.10: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களுக்கு 2 கட்டங்களாக 3,586 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, கெலமங்கலம், பர்கூர், வேப்பனஹள்ளி, சூளகிரி, தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூர் ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. வருகிற 27ம் தேதி தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூர் ஒன்றியங்களுக்கும், 30ம் தேதி கிருஷ்ணகிரி, கெலமங்கலம், பர்கூர், வேப்பனஹள்ளி, சூளகிரி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளுக்கு 30 ஊராட்சி தலைவர்கள், 267 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 20 ஒன்றிய குழு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் 36 ஊராட்சிகளுக்கு 36 ஊராட்சி தலைவர்கள், 336 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 27 ஒன்றிய குழு உறுப்பினர், 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.  பர்கூர் ஒன்றியத்தில் 36 ஊராட்சிகளுக்கு 36 ஊராட்சி தலைவர்கள், 351 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 30 ஒன்றிய குழு உறுப்பினர், 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளுக்கு 27 ஊராட்சி தலைவர்கள், 222 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 15 ஒன்றிய குழு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. மத்தூர் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளுக்கு 24 ஊராட்சி தலைவர்கள், 216 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 17 ஒன்றிய குழு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. ஊத்தங்கரை ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளுக்கு 34 ஊராட்சி தலைவர்கள், 309 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 22 ஒன்றிய குழு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.

சூளகிரி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளுக்கு 42 ஊராட்சி தலைவர்கள், 381 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 25 ஒன்றிய குழு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. ஓசூர் ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளுக்கு 26 ஊராட்சி தலைவர்கள், 234 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 16 ஒன்றிய குழு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. கெலமங்கலம் ஒன்றியத்தில் 28 ஊராட்சிகளுக்கு 28 ஊராட்சி தலைவர்கள், 258 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 19 ஒன்றிய குழு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.  தளி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகளுக்கு 50 ஊராட்சி தலைவர்கள், 435 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 30 ஒன்றிய குழு உறுப்பினர், 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.  அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 10 ஒன்றியங்களில் 333 ஊராட்சி மன்ற தலைவர்கள், 3 ஆயிரத்து 9  ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 221 ஒன்றிய குழு உறுப்பினர், 23 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. மொத்தம் 3 ஆயிரத்து 586 பதவிகளுக்கு 2 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது.

Related Stories: