புழல் ஏரி கால்வாயில் மூழ்கி வாலிபர் மாயம்

புழல்: செங்குன்றம் அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம், என்எஸ்கே தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (21). ஆட்டோ டிரைவர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், இவருக்கும் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த மெர்ஸி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது மெர்ஸி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் நேற்று விஜயகுமார் புழல் ஏரி ஆலமரம் அருகே உள்ள கால்வாயில் மீன் பிடித்தபோது, தவறி கால்வாய்க்குள் விழுந்து நீரில் மூழ்கினார். இதுகுறித்து செங்குன்றம் போலீசுக்கும், செங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அதிகாரிகள் தேவராஜன், முரளி மற்றும்  போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விஜயகுமாரை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: