தர்மபுரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு

தர்மபுரி, நவ.5: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 17ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை இல் லை. மாறாக பகலில் கடும் வெயிலும், மாலை மற்றும் காலை நேரங்களில் கடும் பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகளால் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த பனிபொழிவானது, காலை 9 வரை நீடிப்பதால், சாலைகள் பனிமூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து செல்கின்றன. மேலும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், மருத்துவர்கள் இதுபோன்று பனி காலங்களில், பொதுமக்கள் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Dharmapuri district ,
× RELATED தர்மபுரி நகரில் கடும் பனிபொழிவு