×

இணையதளத்தில் குளறுபடி விவசாயிகளுக்கான உதவித் தொகை நிறுத்தி வைப்பு

வேப்பனஹள்ளி, நவ.5: மத்திய அரசின் விவசாயிகளுக்கான உதவித் தொகை பெறுவதில் குளறுபடி நீடிப்பதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.மத்திய அரசு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ₹6000 உதவித்தொகை அறித்துள்ளது.இந்த தொகையை 3 தவணைகளாக வழங்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் பலர் உதவித் தொகை பெற விண்ணப்பத்தினர். விண்ணப்பங்களை கணினியில் பதிவு செய்யும் போது விவசாயிகளின் விவரங்களை  தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகளுக்கு உதவித்தொகை அவர்களது கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.  

இரண்டு தவணைக்கான உதவித் தொகைகளை பெற்ற பின் பல விவசாயிகளுக்கு பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்களில் தவறு உள்ளதால் 3வது தவணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான தகவல்களை இதற்கான இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய குறுஞ்செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து விவசாயிகள் இணைய தளத்தில் தங்களது விவரங்களை தப்பும் தவறுமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இணைய தளத்தில் ஆதார் தகவல்களை மட்டும் சரி செய்ய வசதிகள் உள்ளதாலும், வங்கி கணக்கு மற்றும் இதர விவரங்களை சரி செய்ய போதுமான வசதிகள் ஏற்படுத்தப்படாததால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். எனவே அரசு விவசாயிகள் தங்களது விவரங்களை சமர்ப்பிக்க போதுமான வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு