திருவேங்கடம் அருகே குளக்காட்டா குறிச்சி பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்

கேடிசி நகர், டிச. 3:  தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா, குருவிகுளம் ஒன்றியத்தில் குளக்காட்டா குறிச்சி, டிடிஏ துவக்கப்பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை அதிமுக மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்.பி., திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளர் சுதாபரமசிவன், குருவிகுளம் ஒன்றியச் செயலாளர் வாசுதேவன், மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் செந்தமிழ்ச்செல்வி, குளக்கட்டா குறிச்சி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் அமுதா பாலசுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் சிபா முருகன், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் சவுந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: