திருவேற்காட்டில் திமுக தெருமுனை கூட்டம்

திருவள்ளூர், நவ. 28: திருவேற்காடு நகர திமுக சார்பில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் தீர்மான விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் என்.இ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் க.பிரபு கஜேந்திரன், மாவட்ட வர்தக அணி அமைப்பாளர் ஏ.ஜெ.பவுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு செயலாளர் கே.பி.எஸ்.சுதாகர், சத்திகிரி ஆகியோர் வரவேற்றனர்.  கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் பொதுக்குழு தீர்மானம் குறித்து விளக்க உரையாற்றினார். இதில் பேச்சாளர் சேலம் சுஜாதா, நகர நிர்வாகிகள் எஸ்.சங்கர், துரை கோபால், தி.லோ.தமிழரசன், வெ.குமாரசாமி, சாரளகுமார்,   பொன்.குணசேகரன், க.சாது, ஏ.இ.செல்வதுரை, இளங்கோ, இ.பாபு உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: