தேனியில் தமமுகவினர் ஆர்ப்பாட்டம்

தேனி, நவ.26: பட்டியலினத்தில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் நல்லுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர்கள் பாலா, வீரமணி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், வாதிரியார், தேவேந்திரகுலத்தான் ஆகிய ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும். இச்சமூகத்தினரை பட்டியலினத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கருப்பு உடையணிந்து கலந்து கொண்டனர்.

Related Stories: