×

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு வெளியீடு

திருச்சி, நவ.22: நவம்பர் 13 முதல் 19 வரை நீங்கள் குழந்தையின் நண்பன் ஒரு வாரகால தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
திருச்சி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு கையேடு வெளியிடும் நிகழ்ச்சி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிசா தலைமை வகித்து கையேட்டை வெளியிட்டார். பிஷப் ஹீபர் கல்லூரி சைல்டு லைன் இயக்குனர் காட்வின் பிரேம்சிங், கோவிந்தராஜூ, நவின்குமார் பாலாஜி, முரளிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

குழந்தை தொழிலாளர்கள், போதை பழக்கத்திற்குள்ளான குழந்தைகள், குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள், குழந்தை திருமணம், பெண் சிசு கொலை மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள், பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள், தெருவோர குழந்தைகள், குழந்தைகளை துன்புறுத்துதல், காணாமல் போன குழந்தைகள், குழந்தைகள் கடத்தல் இது போன்ற சூழ்நிலையில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பொதுமக்கள் பார்க்க நேர்ந்தால் உடனடியாக 1098 என்ற இலவச தொலை பேசி எண்ணுக்கு தகவல் கொடுத்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு துன்புறுத்தப்படுவதில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படும்.

தங்குவதற்கு இடம் இல்லாமல் ஒரு குழந்தை தவிக்கும் போதும், தாக்கப்படும் போதும், துன்புறுத்தப்படும் போதும், குழந்தைக்கு உடல் நலம் இன்றி தனியாக இருப்பதை பார்க்கும் போதும் உடனடியாக சைல்டு லைன் அவசர தொலை எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மருத்துவ ரீதியில் கருவில் உள்ள குழந்தையை பாலினம் கண்டறிந்து கருகலைப்பு தடை செய்யும் சட்டம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச்சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், கட்டாய கல்விக்கான குழந்தைகள் உரிமை சட்டம், வளரிளம் பெண்கள் தன்னுரிமை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டம் குறித்து விவரிக்கப்பட்டது.

மூவலூர் ராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித்திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித்திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம், அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான நிதி உதவித் திட்டம், ஜனனிசுரக்க்ஷா யோஜனா, டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெண் குழந்தைகளுக்காக உள்ளது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags : Office ,Trichy Collector ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...