- உலக தேத்ரி தின விழிப்புணர்வு பேரணி
- முசிறி
- மேக்னா சில்க்ஸ்
- சர்வதேச தேத்ரி தினம்
- முசிறி, திருச்சி மாவட்டம்
- ராமதாஸ்
- முசிறி மேக்னா சில்க்ஸ்
- முசிறி கைகட்
- துறையூர் சாலை
முசிறி, ஜன. 8: திருச்சி மாவட்டம் முசிறியில் சர்வதேச வேட்டிகள் தினத்தை முன்னிட்டு மேக்னா சில்க்ஸ் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை முசிறி மேக்னா சில்க்ஸ் உரிமையாளர் ராமதாஸ் தொடங்கி வைத்தார். பேரணியானது முசிறி கைகாட்டில் தொடங்கி துறையூர் சாலை, பூங்கா, திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலை, புதிய பேருந்து நிலையம், தா.பேட்டை பிரிவு சாலை வழியாக மீண்டும் முசிறி கைகாட்டி வந்தடைந்ததனர்,
பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்டு, நமது தமிழ் பாரம்பரியத்தின் வேஷ்டி சட்டைகள் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பண்டிகை காலங்களில் வேட்டிகள் கட்டி நெசவாளர்களுக்கு உதவ கோரிக்கை விடுத்தனர். இந்த விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடுகளை மேக்னா சில்க்ஸ் மேலாளர் சச்சிதானந்தம் செய்திருந்தார்.
