×

திருச்சியில் லாரி மோதி சாலையை கடக்க முயன்ற பெண் பலி

திருச்சி, ஜன. 8: திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து மன்னார்புரம் செல்லும் சர்வீஸ் சாலையில் பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியே வந்த லாரி பெண் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சகுந்தலா(65) என்பது தெரிய வந்தது. மேலும் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Trichy ,TVS Tollgate ,Mannarpuram ,
× RELATED துவரங்குறிச்சி அருகே சாலையில் கவிழ்ந்த மணல் ஏற்றிய டிராக்டர்