×

தவறி விழுந்த செல்போனுக்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த ஊத்தங்கரை மாணவன்

ஊத்தங்கரை, நவ.20: ரயிலில் இருந்து தவறி விழுந்த செல்போனுக்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த ஊத்தங்கரை மாணவனை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.ஊத்தங்கரை அடுத்த பரசுராமன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சங்கர். லாரி டிரைவரான இவரது மகன் நவீன்குமார். இவர், கோவையில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், விடுமுறையையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஊத்தங்கரைக்கு வந்து கொண்டிருந்தார். ஈரோடு பக்கமாக வநதபோது, படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த நவீன்குமார் கையில் இருந்த செல்போன் தவறி கீழே விழுந்தது. உடனே, அதனை எடுப்பதற்காக நவீன்குமார் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், தலை, நெற்றி, கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து உடன் பயணம் செய்த முகமது பாசில் என்பவர் ஈரோடு ரயில் நிலையத்தில் இறங்கி ரயில்வே போலீசாரிடம் நடந்ததை தெரிவித்தார். ரயில்வே போலீசார் விரைந்து சென்று நவீன்குமாரை மீட்டு உரிய சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து நவீன்குமாரை ஒப்படைத்தனர். செல்போனுக்காக உயிரை விடும் அளவுக்கு நடந்து கொண்ட நவீன்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

காவேரி மருத்துவமனையில்  மரக்கன்று நடும் விழாஓசூர், நவ.20: ஓசூர் காவேரி மருத்துவமனையின் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் மற்றும் மரக்கண்று நடும் விழா நடந்தது.  ஓசூரில் காவேரி மருத்துவமனையின் ஆண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா மற்றும் கிரிக்கெட், கைப்பந்து, பூப்பந்து, கேரம், செஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும், மரக்கன்று நடும் விழாவும் நடந்தது. ஓசூர் மகாலட்சுமி நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழாவை ஹைக்யூ எலக்ட்ரானிக்ஸ் மேலாண்மை இயக்குநர் டாக்டர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வெண்ட் இண்டியா கம்பெனி வியாபார தலைமை சுந்தரய்யா, மது வெங்கடாசலபதி, அசோகன் மகாலட்சுமி நகர பகுதி பொதுமக்கள் மற்றும் காவேரி மருத்துவமனையின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் விஜயபாஸ்கர், மருத்துவர் அரவிந்தன், நாகேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : student ,Uttankarai ,
× RELATED சரக்கு ரயிலில் ஏறி செல்பி : மின்சாரம் தாக்கி மாணவன் பலி