×

விகேபுரம் சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் நடவடிக்கை

வி.கே.புரம், நவ. 20: வி.கே.புரத்தில் சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் காஞ்சனா எச்சரிக்கை விடுத்துள்ளார். வி.கே.புரம் நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆடு, மாடுகள் திரிகின்றன. இரவு நேரங்களில் இவை சாலையை ஆக்கிரமித்து கொள்கின்றன. இதனால் தெருவிளக்கு இல்லாத பகுதியில் வரும் வாகனங்கள், கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுகிறது. மேலும் சாலையில் திரியும் கால்நடைகள், திடீரென சண்டையிட்டு வாகனங்களில் மோதுகின்றன. இதனால் வாகனங்களில் வருவோர் கீழே விழுந்து உயிரிழக்கும் அபாயமும் காணப்படுகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வி.கே.புரம் இந்து முன்னணியினர் நகராட்சி ஆணையாளர் காஞ்சனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகராட்சி பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் உடனடியாக பிடித்து சென்று தங்கள் வீட்டில் வளர்க்க வேண்டும். தவறினால் சாலைகள் மற்றும் நகராட்சி பகுதியில் சுற்றுத் திரியும் கால்நடைகளை நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டுவருவதோடு உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.Tags : roads ,
× RELATED நாகுடி பகுதியில் அம்மை நோய் பாதித்த கால்நடைகளுக்கு சிகிச்சை