×

முன்விரோதத்தில் மூதாட்டி மீது தாக்குதல்

நாங்குநேரி, நவ. 20: விஜயநாராயணம் அருகே பெரியநாடார் குடியிருப்பை சேர்ந்தவர் சாமி மனைவி சித்திரைக்கனி(65). இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த காமராஜ் மனைவி இசக்கி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இசக்கி தாக்கியதில் சித்திரைக்கனிக்கு எலும்புமுறிவு ஏற்பட்டது. நாட்டு வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டு சித்திரைக்கனியை இசக்கி மீண்டும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சித்திரைக்கனி அளித்த புகாரின் பேரில் விஜயநாராயணம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : grandfather ,foreground ,
× RELATED விடுமுறையில் வீட்டுக்கு வந்த லண்டன்...