×

பவானி அருகே கொண்டாடப்பட்ட தாத்தா, பாட்டிகள் தினம்: ஜெயிலர் பட பாடலுக்கு உற்சாக நடனம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே தாத்தா, பாட்டிகள் தினவிழா உற்சாகத்துடன் கொண்டாடபட்டது. சேவாகக்வுண்டனூரில் உள்ள தனியார் பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பேரக்குழந்தைகளுடன் தாத்தாக்களும், பாட்டிகளும் கலந்துகொண்டனர். தாத்தாகள் மற்றும் பாட்டிகளுக்கு நடனம், ஜோடி பொருத்தம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து தாத்தாக்கள் மற்றும் பாட்டிகளுடன் தனித்தனியாக பேரக்குழந்தைகளுடன் மேடையேறி நடனமாடினர். ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு படிகள் தங்களது வயதையும் மறந்து ஆனந்தமாக நடனமாடியதை அனைவரும் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொருளாதார நெருக்கடி மற்றும் நகர சூழல் காரணமாக சொந்த ஊர்களில் தனித்து விடப்பட்ட தாத்தா, பாட்டிகளுடன் பேரக்குழந்தைகளுக்கான உறவை புதுப்பிக்கவே இந்த விழாவை நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

The post பவானி அருகே கொண்டாடப்பட்ட தாத்தா, பாட்டிகள் தினம்: ஜெயிலர் பட பாடலுக்கு உற்சாக நடனம் appeared first on Dinakaran.

Tags : Grandfather ,day ,Bhavani ,Erode ,Bhavani, Erode district ,Sevagagountanur ,Grandpa's Day ,
× RELATED திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம்...