×

சேலம் கராத்தே கிளப் மாணவர்கள் சாதனை

சேலம், நவ.19:அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் சேலம் கராத்தே கிளப் மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.  சேலத்தில் உள்ள அகில இந்திய அனைத்து தற்காப்பு கலை சம்மேளனம் சார்பில் 7ம் ஆண்டு அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது. போட்டிக்கு அகில இந்திய அனைத்து தற்காப்பு கலை சம்மேளன தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். போட்டியில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்பட மாநிலங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சேலம் கராத்தே கிளப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். மேலும் சேலம் கராத்தே கிளப்பை சேர்ந்த 6 பேர், பல்வேறு எடை பிரிவுகளில் முதல் பரிசை வென்றனர். அதே கிளப்பை சேர்ந்த 6 பேர் 2வது இடத்தையும், 17 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர். நிகழ்ச்சியில் விநாயகா மிஷன் பவுண்டேசன் நிறுவனர் அன்னபூரணி சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போட்டியில் வென்ற மாணவ மாணவிகளை, கராத்தே பயிற்சியாளர் கார்த்திக் பாராட்டினார்.

Tags :
× RELATED மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை