கந்திகுப்பம் காலபைரவர் கோயிலில் கால பைரவாஷ்டமி பெருவிழா

கிருஷ்ணகிரி, நவ.19:  கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தில் உள்ள கால பைரவர் கோயிலில், 12ம் ஆண்டு கால பைரவாஷ்டமி பெருவிழா, கடந்த 11ம் தேதி முதல் விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவில், 63 நாயன்மார்களுக்கு கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. தினந்தோறும் மாலை 6 மணிக்கு சொற்பொழிவு, நாடகம், பரத நாட்டியம் நடைபெற்று வருகிறது. இது குறித்து தவத்திரு பைரவ நாதசுவாமிகள் கூறியதாவது:

12ம் ஆண்டு காலபைரவாஷ்டமியை முன்னிட்டு இன்று (19ம் தேதி) காலை 6 மணி முதல் காலபைரவருக்கு மாலை அணிவித்து, பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். பின்னர், மாலை 6 மணிக்கு தேர் ஊர்வலம் செங்கொடி நகர், சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கந்திகுப்பம் சென்று கோயிலை அடைகிறது. விழாவினை முன்னிட்டு கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, நாதஸ்வரம், தாரை தப்பட்டை, வாணவேடிக்கையுடன் தேர் பவனி நடைபெற உள்ளது. காலபைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பஸ் வசதி, கோயிலின் சார்பில்  கந்திகுப்பத்தில் இருந்து இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரம் அன்னதானம் வழங்கப்படுகிறது. வருகிற 21ம் தேதி விழா நிறைவு பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: