தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

சென்னை: இந்திய அரசின் பனை பொருட்கள் நிறுவனம் சார்பில், சென்னை மாதவரம் மில்க் காலனியில் உள்ள மத்திய பனை பொருட்கள் பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இதில், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தது 8ம் வகுப்பு. பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

Advertising
Advertising

Related Stories: