அண்ணாநகர் அஞ்சலக அலுவலகம் இடமாற்றம்

சென்னை: அண்ணாநகர் கிழக்கு அஞ்சலக அலுவலகம் வரும் 18ம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது, என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வடக்கு கோட்ட அஞ்சல் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அண்ணாநகர் கிழக்கு அஞ்சலகம் தற்போது. கே.பிளாக் எண்.33/7 அண்ணாநகர் கிழக்கு சென்னை-600102 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம், வரும் 18ம் தேதி முதல் ஏ  பிளாக் எண்.24/44, 6வது தெரு, அண்ணாநகர் கிழக்கு சென்னை-600102 என்ற முகவரியில் செயல்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>