ராதிகா சரத்குமாருக்கு அமிதாப்பச்சன் வாழ்த்து

சென்னை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி 1 கோடி பரிசு தொகையை கொண்டது. உலகில் முதன்முறையாக பெண்கள் மட்டும் பங்கேற்க இருக்கும் இந்த பிரத்யேக நிகழ்ச்சியில் அவர்களின் அறிவுக்கூர்மை, விழிப்புணர்வு ஆகியவற்றை உலகிற்கு அடையாளம் காட்டும் விதமாக உருவாகிறது. இந்நிலையில் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி வெற்றியடைய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிகை ராதிகா சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதில் அமிதாப் பச்சன் கூறியிருப்பதாவது: கலர்ஸ் கோடீஸ்வரி நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துகிறேன். தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முதல் பெண் நடிகை நீங்கள். இதுவொரு தனித்துவமான நிகழ்வாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பெண்களை மிகவும் ஊக்குவிப்பதாக, உத்வேகம் அளிப்பதாக, நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. உங்களுக்கும், போட்டியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>