×

காங்.சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணி ஆலோசனை கூட்டம்

குளச்சல், நவ.12: குளச்சல்  நகர காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணி தொடர்பான ஆலோசனை  கூட்டம் நடந்தது. நகர தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாநில  பொதுக்குழு உறுப்பினர் யூசுப்கான், வர்த்தக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜாண்  சுந்தரராஜ், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் முனாப், மீனவர்  காங்.தலைவர் ஸ்டார்வின், நகர துணைத்தலைவர்கள் பிரான்சிஸ்,  அந்திரியாஸ், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரின்ஸ் எம்எல்ஏ, மாநில மீனவர் காங்.தலைவர் சபின் ஆகியோர் சிறப்பு  விருந்தினராக பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். ரகீம், தர்மராஜ், குமார்,  லாலின், ஸ்வீட்டன், அஷ்ரப், சுதிர், மாகீன், ஜலாலுதீன், செந்தில்,  பாலகிருஷ்ணன், ஜஸ்டின், பட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில்  உள்ளாட்சித் தேர்தலில் குளச்சல் நகர்மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்  பதவிக்கு தேர்தல் பணி செய்திட எம்.எல்.ஏ.பிரின்ஸ் தலைமையில் 15 பேர் கொண்ட  குழு அமைப்பது என்று வலியுறுத்தப்பட்டது.

Tags : Elections Advisory Meeting ,
× RELATED உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்...