×

ஓமலூர் கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்பி

ஓமலூர், நவ.12: ஓமலூர் வடக்கு ஒன்றிய கிராமங்களில் சேலம் பார்த்திபன் எம்.பி., மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். ஓமலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர் கொல்லப்பட்டி, மூங்கில்பாடி, தேக்கம்பட்டி, நாரணம்பாளையம், புளியம்பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மற்றும் மக்கள் குறைகேட்கும் கூட்டங்கள் நடைபெற்றது. நாரணம்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் மணி வரவேற்றார். சேலம் பார்த்திபன் எம்.பி., வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மொலாண்டிப்பட்டியைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் மணியின் சித்தப்பா கோவிந்தன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், ஓமலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணி, மாவட்ட துணை செயலாளர் திருஞாவுக்கரசு, இளைஞரணி துணை அமைப்பாளர் மதிவாணன், ஒன்றிய பொருளாளர் ரமேஷ், ஊராட்சி செயலாளர்கள் சங்கர், சரளா துரை, பெருமாள், மொலாண்டிப்பட்டி கிளை செயலாளர் சந்திரசேகர், பாஸ்கரன், நீதிதேவன், குழந்தைமாரி, ராம்கி மற்றும் ஓமலூர் குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,voters ,Omalur ,villages ,
× RELATED திமுக சார்பாக புதிய வாக்காளர் சேர்க்கும் பணி