பெண்களை சரமாரி தாக்கி நகை பறிப்பு: 2 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் 1வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பாரதி (32). இவர் கடந்த மாதம் 18ம் தேதி இரவு அதே பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, மொபட்டில் வீட்டிற் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 2 மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்தனர். இதனால், பாரதி கூச்சலிட்டபடி, கொள்ளையர்களிடம் செயின் பறிபோகாமல் இருக்க போராடினார். இதனால், ஆத்திரமடைந்த வழிப்பறி கொள்ளையர்கள் பாரதியை சரமாரி தாக்கிவிட்டு, 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

Advertising
Advertising

மற்றொரு சம்பவம்: முகப்பேர் 1வது பிளாக்கை சேர்ந்த பரமேஸ்வரி (60), கடந்த 21ம் தேதி அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு நடந்து சென்றபோது, அந்த வழியாக ைபக்கில் வந்த 2 மர்ம நபர்கள், பரமேஸ்வரியை தாக்கி, அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், சென்னை பாடி சக்தி நகரை சேர்ந்தவர் மோகன் (21), அதே பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (19) ஆகியோர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை நேற்று கைது செய்து, அவர்களிடம் இருந்து 6 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கைதான மோகன் மீது கொரட்டூர், திருமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: