கொடிக்குறிச்சி கல்லூரியில் சுஜித்துக்கு மவுன அஞ்சலி

தென்காசி, நவ. 7:  திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணறு குழாயில் விழுந்து பலியான குழந்தை சுஜித்துக்கு தென்காசி கொடிக்குறிச்சி ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி குழுமங்களின் சேர்மன் மணிமாறன் தலைமை வகித்தார். முதல்வர் பீர்முகைதீன், துணை முதல்வர் ராமர், கல்லூரியின் அனைத்து பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: