பொதுக்கிணற்றை மூடி கட்டிய கட்டிடத்தை அகற்ற கோரிக்கை

நெல்லை, நவ. 7: கடையநல்லூர் தாலுகா கொடிக்குறிச்சி ஊராட்சி சிவராமப்பேட்டை ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: எங்கள் ஊரில் பஞ்சாயத்துக்கு சொந்தமான ஊர் பொதுக்கிணற்றை மூடி கட்டிடம் கட்டப்பட்டதை அகற்ற கோரி 6 முறை மனு கொடுத்தோம். அந்த மனுவிற்கு தாங்கள் அளித்துள்ள பதிலில், ‘ஊர் பொதுக்கிணற்றை மூடி கட்டிடம் கட்டப்பட்டதை உடனே அகற்றும் படி கடையநல்லூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அகற்றவில்லை.

Advertising
Advertising

இதுகுறித்து கடையநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் கேட்டால் உரிய பதில் எதுவும் தெரிவிக்கப்படாமல் அலைக்கழிக்கின்றனர். எனவே, ஊர் பொதுக்கிணற்றை மூடி பொதுமக்களை தண்ணீர் எடுக்க விடாமல் இடையூறு செய்யும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: