கீழாம்பூரில் கட்டி முடித்து 6 மாதமாகியும் பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கடையம், நவ. 7: கீழாம்பூரில் கட்டி முடித்து 6 மாதங்களாகியும் பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். கடையம் யூனியன் கீழாம்பூர் ஊராட்சிக்குட்பட்ட அம்பை - தென்காசி சாலையில் கீழாம்பூர் பஸ் நிறுத்தம் அருகே பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம்  கட்டப்பட்டு 6 மாதங்களாகியும், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல் பூட்டியே கிடக்கிறது.

Advertising
Advertising

இதனால் இங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் கீழாம்பூர், மஞ்சம்புளி காலனி, கோவன்குளம், கருத்தப்பிள்ளையூர், காக்கநல்லூர், தாட்டான்பட்டி கிராமங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த வளாகம் பூட்டிக் கிடப்பதால் அருகில் மெயின் ரோட்டை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாய நிலை உருவாகி உள்ளது. எனவே 6 மாதமாக பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: