கடையம், நவ.6: கடையம் அடுத்த மாலிக் நகரில் ரூ.4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை பூங்கோதை எம்எல்ஏ திறந்து வைத்தார்.கடையம் அடுத்துள்ள மாலிக் நகரில் இருந்த சேதமடைந்த நிழற்குடை பயணிகள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதனை அகற்றி புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து பூங்கோதை எம்எல்ஏ தனது சட்டமன்ற தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 லட்சம் செலவில் புதிய பயணிகள் நிழற்குடையை கட்டி திறந்து வைத்தார்.