குளித்தலை ஆர்எஸ் ரோடு மவுனகுரு சாமி மடம் பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

குளித்தலை, நவ. 5: குளித்தலை ஆர் எஸ் ரோடு மவுனகுரு சாமி மடம் பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கரூர் மாவட்டம் குளித்தலை ஆர்எஸ் ரோட்டில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் கந்தசஷ்டி பெருவிழா ஒரு வார காலம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 5 நாட்கள் மாலை 5 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய விழாவாக சனிக்கிழமை கந்தசஷ்டி பெருவிழா தொடர்ந்து காலை 10 மணிக்கு உற்சவமூர்த்தி கடம்பர் கோயிலிலிருந்து திருவீதி வழியாக அழைத்து வந்து அபிஷேக ஆராதனை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டு மாலையில் சிறப்பு சந்தன காப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா முடிவடைந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Related Stories: